தேசிய செய்திகள்

கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்; முழு பட்டியல் + "||" + Now, Indians can travel to 17 countries; check full list

கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்; முழு பட்டியல்

கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்; முழு பட்டியல்
கொரோனா காலத்திலும் இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இதற்கான சிறப்பு விமான பயண ஏற்பாடுகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளது.
புதுடெல்லி

இரு நாடுகளுக்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களை நடத்துவதற்கு உக்ரைனுடன் ஒரு தனி இருதரப்பு சிறப்பு விமான  ஏற்பாட்டை (Transport bubbles )
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் செய்துள்ளதால், இப்போது இந்தியர்கள் 17 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.

சிறப்பு விமான பயண ஏற்பாடுகள் என்பது கொரோனா தொற்றுநோய் காரணமாக வழக்கமான சர்வதேச விமானங்கள் இடைநிறுத்தப்படும்போது வணிக பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்கும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையிலான தற்காலிக ஏற்பாடுகள் ஆகும். அவை பரஸ்பர, அதாவது இரு நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் ஒரே மாதிரியான நன்மைகளை அனுபவிக்கின்றன.

இதனால் சிஐஎஸ் நாடுகளில் (ரஷ்யாவைத் தவிர) இந்திய குடிமக்கள் உக்ரைன் வழங்கிய பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் அனைத்து வெளிநாட்டு இந்திய குடிமக்களும் பயன்பெறுவார்கள்

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஓமான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், மாலத்தீவுகள், நைஜீரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூட்டான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இதே போன்ற ஏற்பாடுகளை செய்து உள்ளது.