காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கொரோனா தொற்றால் பாதிப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான குலாம்நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட குலாம் நபி ஆசாத் அதில் கூறியிருப்பதாவது: "எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story