நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி


நல்ல செய்தி!! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 17 Oct 2020 1:26 PM IST (Updated: 17 Oct 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

நல்ல செய்தி! ரஷியாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இரண்டாம் கட்ட சோதனை விரைவில் இந்தியாவில் மீண்டும் தொடங்கப்படலாம்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், ரஷிய கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியா மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று ஸ்பூட்னிக் வி  தெரிவித்துள்ளது. 

தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்குமாறு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) நிபுணர் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரைத்து உள்ளது.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டியின் ஆய்வக மருந்து நிறுவனம் அக்டோபர் 13 ம் தேதி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ) மீண்டும் விண்ணப்பித்தது, நாட்டில் தடுப்பூசியின் ஒருங்கிணைந்த கட்டம் 2 மற்றும் 3 மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்த அனுமதி கோரியது.

முந்தைய சோதனையில்  பின்னடைவைச் சந்தித்த பின்னர், இந்த நிறுவனம் இப்போது ஒரு திருத்தப்பட்ட நெறிமுறையை கொண்டு வந்துள்ளது, இது இரண்டாம் கட்ட சோத்னையில் 100பேர்களை உள்ளடக்கும் என்றும், மூன்றாம் கட்ட சோதனைகளில் 1,400 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின்  2 ஆம் கட்ட மருத்துவ சோதனைக்கு முதலில் அனுமதி வழங்க மருத்துவ நிபுணர் குழு  பரிந்துரைத்துள்ளது. முதல் கட்டத்தின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தரவை அவர்கள் சமர்ப்பித்த பின்னர், அவர்கள் சோதனைகளின் 3 ஆம் கட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் , "என்று பி.டி.ஐ.தெரிவித்துள்ளது.

நிபுணர் குழு விண்ணப்பம் குறித்து விவாதித்தது. ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளையும் அதன் விநியோகத்தையும் நடத்துவதற்கு இந்திய மருந்து நிறுவனமான ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்.டி.ஐ.எஃப்) ஒத்துழைத்துள்ளது.

இதற்கிடையில், ரஷியா புதன்கிழமை (அக்டோபர் 14) மற்றொரு கொரோனா வைரஸ்  தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கியதாக அறிவித்தது. ஸ்பூட்னிக் வி எபிவாகொரோனா என்ற அந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் தடுப்பூசி ஸ்பூட்னிக் வி ஆகும்

மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ஸ்பூட்னிக் வி, ஆகஸ்ட் மாதம் ரஷியாவில் பயன்படுத்த உரிமம் பெற்றது. எபிவாகொரோனாவைப் போலவே மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு முன்பும் ஸ்பூட்னிக் வி பதிவு செய்யப்பட்டது. ஸ்பூட்னிக் வி இன் மனித சோதனை தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.


Next Story