கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்வு


கேரளாவில் புதிதாக 9,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 Oct 2020 2:48 PM GMT (Updated: 2020-10-17T20:18:48+05:30)

கேரளாவில் இன்று மேலும் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பாதிப்புகளின் தீவிரம் சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் 4,295 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது

இதனிடையே கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக குறைந்த தொற்று எண்ணிக்கை, சமீப நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,016 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,228 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,139 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 7,991 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,36,989 ஆக அதிகரித்துள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 96,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story