நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - தேவேந்திர பட்னாவிஸ்


நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் - தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 18 Oct 2020 1:31 PM IST (Updated: 18 Oct 2020 1:31 PM IST)
t-max-icont-min-icon

நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளதாக மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பீகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி 71 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதில் ராஷ்டிரிய ஜனதா தள மெகாக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன. மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,

நாங்கள் பீகாரில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டாலே மக்களிடையே அதிக அளவிலான உற்சாகத்தைக் காணமுடிகிறது. பீகாரில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடியின் பெயர் பேசப்படுகிறது. 

நாடும் நாட்டு மக்களும் பிரதமர் மோடியின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். இது பாஜகவிற்கு மட்டுமல்லாமல், கூட்டணிக் கட்சிகளுக்கும் பலனளிக்கும் என்று கூறினார்.

Next Story