இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு


இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை- இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 8:30 PM GMT (Updated: 18 Oct 2020 8:08 PM GMT)

இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

புதுடெல்லி, 

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நீடித்து வரும் மோதல் மற்றும் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 12-ந் தேதி 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் எல்லையில் இரு தரப்பும் படைகளை விலக்குவது குறித்து பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. எனினும் இந்த பேச்சுவார்த்தை நேர்மறையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருந்ததாக இரு தரப்பும் கூறின. மேலும் பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் முடிவு செய்துள்ளதாக கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. எனினும் இதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அவை கூறின. இந்த பேச்சுவார்த்தையிலும் படைகளை விலக்குவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.


Next Story