இரு மாநில மக்களிடையே மோதல்: அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம்


இரு மாநில மக்களிடையே மோதல்: அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2020 2:48 AM IST (Updated: 19 Oct 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

அசாம்-மிசோரம் எல்லையில் (மிசோரமின் கொலாசிப் மாவட்டம் மற்றும் அசாமின் சச்சார் மாவட்டம் அடங்கிய பகுதி) இரு மாநில மக்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது.

சில்சார், 

மிசோரம் மாநிலம், 164.6 கி.மீ. நீள எல்லையை அசாம் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரு மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. 1995-ம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அசாம்-மிசோரம் எல்லையில் (மிசோரமின் கொலாசிப் மாவட்டம் மற்றும் அசாமின் சச்சார் மாவட்டம் அடங்கிய பகுதி) இரு மாநில மக்களிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. கற்களாலும், தடிகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் காயம் அடைந்தனர். குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. வன்முறை பாதித்த இடங்களில் மிசோரம் அரசு, ரிசர்வ் படையினரை நிறுத்தி உள்ளது.

Next Story