முறையாக கடன் தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை மத்தியஅரசு திட்டம்


முறையாக கடன் தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை மத்தியஅரசு  திட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2020 7:07 AM GMT (Updated: 19 Oct 2020 7:07 AM GMT)

முறையாக கடன் தவணையை செலுத்தியவர்களுக்கும் மத்தியஅரசு சலுகை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி

வங்கிக் கடன் தவணை தள்ளிவைப்பு காலத்திற்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய உள்ள மத்திய அரசு, அந்த காலகட்டத்தில் முறையாக தவணையை செலுத்தியவர்களுக்கும் சலுகை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத காலத்திற்கு, கடன் தவணைகளை தள்ளிவைத்தவர்களுக்கு, 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய உள்ளது.

மார்ச் 27 ம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கிகொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டு கடன் வாங்குவோருக்கு ஏதுவாக மார்ச் 1 முதல் விதிமுறைகள் கடன்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அறிவித்தது. மே 22 அன்று, இது தற்காலிக தடை காலத்தை ஆகஸ்ட் 31, 2020 வரை மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்தது.

தீபாவளிக்கு முன்னதாக இதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ள மத்திய அரசு, கூட்டுவட்டி தள்ளுபடியால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 மாத காலத்தில் கடன் தவணைகளை முறையாகச் செலுத்தியவர்களுக்கும் சலுகை அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story