தாய் என்பது தனித்தன்மை வாய்ந்ததே: வெள்ள நீரில் சிக்கிய 2 குட்டிகள் - லாவகமாக மீட்ட தாய் நாய்! வைரலாகும் வீடியோ


தாய் என்பது தனித்தன்மை வாய்ந்ததே: வெள்ள நீரில் சிக்கிய 2 குட்டிகள் - லாவகமாக மீட்ட தாய் நாய்! வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 19 Oct 2020 7:42 AM GMT (Updated: 2020-10-19T13:12:40+05:30)

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்று வெள்ள நீரில் இருந்து தனது குட்டியை லாவகமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

தன் குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றால் எதையும் செய்ய துணியும் தாய்மை. ஐந்து அறிவு கொண்ட மிருகங்கள் கூட தனது குட்டிக்கு ஒரு ஆபத்து என்றால் தன் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றி விடும்.

எந்த உயிரினங்களாக இருந்தாலும் தாய் என்பது தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது. 

அந்த வகையில் கர்நாடகாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகள் கடந்த வாரத்தில் பெய்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலையெங்கும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. அந்தந்த மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம், தரப்பூர் கிராமத்தில், நாய் ஒன்று தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு, முழங்கால் ஆழமான நீர் வழியே கடந்து, நீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்கிறது. 

தனது உயிருக்கு ஆபத்து என்று கூட பார்க்காமல் தனது குட்டியை காப்பாற்றும் முயற்சியில் அந்த தாய் நாய் வெற்றி பெற்றுள்ளது. இச்சம்பவம் பார்ப்பவரின் அனைவர் மத்தியிலும் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story