கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி


கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி
x
தினத்தந்தி 20 Oct 2020 10:28 AM IST (Updated: 20 Oct 2020 10:28 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பால் சிறுமி ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான சிறுமி( வயது 11) ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.

குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.

இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-

11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.

எய்ம்ஸ், டெல்லி, குழந்தை நரம்பியல் பிரிவு, குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-

இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோத்னை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம். 

ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.

மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.


Next Story