கொரோனா பாதிப்பு: உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்; மத்திய அரசு


கொரோனா பாதிப்பு:  உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்; மத்திய அரசு
x
தினத்தந்தி 20 Oct 2020 12:23 PM GMT (Updated: 2020-10-20T17:53:02+05:30)

உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையை இந்தியா அதிகம் கொண்டுள்ளது என மத்திய சுகாதார செயலாளர் இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்பு சூழல் பற்றி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையை இந்தியா அதிகம் கொண்டுள்ளது.

இதேபோன்று கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் நமது நாடு 2வது இடத்தில் உள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாம் இதுவரை நாட்டில் 9.6 கோடிக்கும் கூடுதலான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.  கடந்த 7 நாட்களில் 10 லட்சத்தில் 310 பாதிப்புகளே நாட்டில் ஏற்பட்டு உள்ளன.  இது சர்வதேச அளவில் மிக குறைவு.

இதேபோன்று இந்த காலகட்டத்தில் 10 லட்சத்தில் 83 உயிரிழப்புகளே பதிவு செய்யப்பட்டு உள்ளன.  இதுவும் சர்வதேச அளவில் மிக குறைவாகும்.  குணமடைந்தோர் விகிதம் 88.63 ஆக உள்ளது.  இது தொடர்ந்து முன்னேற்றமடையும்.  சிகிச்சையில் உள் 7.5 லட்சம் என்ற எண்ணிக்கையும் இனி தொடர்ந்து சரிவடையும் என்று அவர் கூறினார்.

Next Story