நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி விகிதம் சரிவு; பிரதமர் மோடி உரை


நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி விகிதம் சரிவு; பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 20 Oct 2020 6:38 PM IST (Updated: 20 Oct 2020 6:38 PM IST)
t-max-icont-min-icon

உலக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி விகிதம் சரிந்துள்ளது என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர் கூறும்பொழுது, பண்டிகை காலங்களில் சந்தைகள் மீண்டும் செயல்பட தொடங்குகின்றன.

ஊரடங்கு முடிந்து விடலாம்.  ஆனால், கொரோனா வைரசானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டிய விசயம்.  ஒவ்வொரு இந்தியரின் முயற்சியால் கடந்த 7 முதல் 8 மாதங்களில் இந்தியா ஒரு நிலையான சூழ்நிலையில் உள்ளது.  அது வீழ்ந்து போக நாம் விட்டு விட கூடாது என கூறியுள்ளார்.

நாட்டில் குணமடைந்தோர் விகிதம் நல்ல முறையில் உள்ளது.  உயிரிழப்பு விகிதம் மிக குறைவு.  இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் 5,500 பேருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 25 ஆயிரம் ஆக உள்ளது என்று கூறியுள்ளார்.

இதேபோன்று உயிரிழப்பு விகிதம் என எடுத்து கொண்டால் இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் 83 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதுவே அமெரிக்கா, பிரேசில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 600க்கும் கூடுதலாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Next Story