பீகாரில் சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன


பீகாரில் சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன
x
தினத்தந்தி 20 Oct 2020 8:19 PM IST (Updated: 20 Oct 2020 8:19 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் கோரக்பூர் மற்றும் கொல்கத்தா இடையே இயக்கப்பட்ட பண்டிகை கால சிறப்பு ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.

பாட்னா,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ள சூழலில் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  எனினும், சரக்கு ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த கூடும் என்ற நோக்கில் பண்டிகை கால சிறப்பு ரெயில் போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது.

இந்த சூழலில், கோரக்பூர் மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு இடையேயான பண்டிகை கால சிறப்பு ரெயில் ஒன்று இன்று சிலாத் மற்றும் சிஹோ ஆகிய பகுதிகளுக்கு இடையே வந்தபொழுது ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன.  இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் இல்லை என கூறப்படுகிறது.  இதனால் அந்த வழியே செல்ல கூடிய மற்ற ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story