நரேந்திர மோடி உரைக்கு யூடியூபில் ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக
நரேந்திர மோடி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.
புதுடெல்லி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்த அறிவித்த பொது முடக்க கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது ஊரடங்கு தளர்வு 5.0 நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நே மாலையில் நாட்ற்றுடு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அவர் உரையாற்றினார்.அவரது உரை பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று எச்சரித்த மோடி காணொளி சமூக ஊடகங்களில் விவாத பொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.
நரேந்திர மோடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியை டிஸ்லைக் செய்திருந்தனர்.
இதன் காரணமாக அந்தக் காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திர மோடியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டிருக்கின்றன.
ஒருவேளை இதை எதிர்பார்த்து கமெண்ட் செய்வதற்கான வாய்ப்பும் இந்த காணொளியில் நீக்கப்பட்டிருந்தது நிகழ்ந்திருக்கலாம் என்று இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது
Related Tags :
Next Story