ஜம்மு காஷ்மீரில், பஞ்சாயத் ராஜ் சட்டம் அமல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிருபர்களுக்கு விளக்கமளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்,
சட்டம்- 370 அமலில் இருந்த காலகட்டத்தில் மூன்று அடுக்கு முறை ஜம்மு காஷ்மீரில் இல்லை. இந்த பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் கிராம நிர்வாகம் ஜம்மு காஷ்மீரில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா அளித்த வாக்குறுதி இப்போது மீட்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மூன்று அடுக்கு அளவிலான ஜனநாயகத்தை நாட்டின் பிற பகுதிகளைப் போலவே நிறுவ இந்த நடவடிக்கை உதவும் என்று கூறினார்.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இனி நாட்டின் பிற மாநிலங்களில் இருப்பது போன்று மூன்று அடுக்கு அரசியல் அமைப்புகள் செயல்படும்.
இதன் மூலம் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றிய, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது போல ஜம்மு காஷ்மீரிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story