பீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை


பீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணை இந்தியா வெற்றிகர சோதனை
x
தினத்தந்தி 22 Oct 2020 1:48 PM IST (Updated: 22 Oct 2020 1:48 PM IST)
t-max-icont-min-icon

பீரங்கி, கவச வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

புதுடெல்லி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய, பீரங்கி, கவச  வாகனங்களை தாக்க வல்ல  நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது. 

ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் காலை 6:45 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.  நாக் ஏவுகணையின் இறுதி சோதனையை இந்தியா இன்று மேற்கொண்டது. 

இதை தொடர்ந்து எதிரி டாங்குகள் மற்றும் பிற கவச வாகனங்களை அழிக்கும் வல்லமை பெற்ற ஏவுகணை அமைப்பு இப்போது இந்திய இராணுவத்தில் இணைய தயாராக உள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நாக் ஏவுகணை, நிலத்திலிருந்தும், வான் பரப்பிலிருந்தும் ஏவலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

நாக் ஏவுகணை கேரியரில் (NAMICA) இருந்து சுடப்படும் நாக் ஏவுகணை அமைப்பு, இலக்குகளை 4 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தாக்க முடியும். இது இலக்கை துல்லியமாக தாக்கும் நவீன தொழில் நுட்பத்தை கொண்டது. 

நாக் ஏவுகணை மூன்றாம் தலைமுறை பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை ஆகும், இது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும், எதிரியின் டாங்குகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

இராணுவம் தற்போது இரண்டாம் தலைமுறை மிலன் 2 டி  மற்றும் கொங்கூர் பீரங்கி வாகனத்தை அழிக்கும் ஏவுகணைகளைப்  பயன்படுத்துகிறது.

இந்திய ராணுவத்திற்கு 300 நாக் ஏவுகணைகள் மற்றும் 25 ஏவுகணை கேரியர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் 2018 ல் அனுமதி அளித்தது.

இந்தியாவை  தற்சார்ப்பு  நாடாக ஆக்க வேண்டும் என அழைப்பு விடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த டிஆர்டிஓமேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்


Next Story