பறக்கும் விமானத்தில் பயங்கரவாதி...? பீதியை ஏற்படுத்திய பயணி கைது!


பறக்கும் விமானத்தில் பயங்கரவாதி...?  பீதியை ஏற்படுத்திய பயணி கைது!
x
தினத்தந்தி 23 Oct 2020 5:55 AM GMT (Updated: 2020-10-23T11:25:44+05:30)

பறக்கும் விமானத்தில் பயங்கரவாதி என பீதியை ஏற்படுத்திய பயணியை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பனாஜி:

டெல்லியில் இருந்து கோவாவுக்கு ஏர் இந்தியா விமானம் விண்ணில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது
டெல்லி ஓக்லாவில் வசிக்கும் ஜியா-உல் ஹக், என்பவர் எழுந்து தான் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவின் அதிகாரி என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கூறினார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்

உடனடியாக இது குறித்து விமானி கோவா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார், மேலும் விமானம் கோவாவில்  பயங்கரவாதி இருப்பதாக தகவல் கொடுத்தவர் காவலில் வைக்கப்பட்டார். 

தற்போது அவரை கோவா காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பயணியின்  குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அவதிப்பட்டு வருவதாகவும் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.


Next Story