நபியை அவமதிப்பவர்களை சிறையில் அடைக்க இஸ்லாமிய நாடுகளை கேட்டு கொள்ளும்- ஜாகீர் நாயக் + "||" + If they abuse Prophet, put them behind bars': Zakir Naik incites Islamic nations to target non-Muslim Indians
நபியை அவமதிப்பவர்களை சிறையில் அடைக்க இஸ்லாமிய நாடுகளை கேட்டு கொள்ளும்- ஜாகீர் நாயக்
இஸ்லாமியரையோ அல்லது நபியையோ அவமதித்தால் முஸ்லிம் அல்லாத இந்தியர்களை சிறையில் அடைக்க இஸ்லாமிய நாடுகளை ஜாகீர் நாயக் கேட்டு கொண்டு உள்ளார்.
புதுடெல்லி:
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், இஸ்லாமியரையோ அல்லது நபியையோ அவமதித்தால் முஸ்லிம் அல்லாத இந்தியர்களை சிறையில் அடைக்க வளைகுடா நாடுகளை கேட்டு கொண்டு உள்ளார். அத்தகைய இந்தியர்களின் தரவுத்தளத்தை உருவாக்கும்படி அவர் கேட்டுக் கொண்டு உள்ளார் என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டு உள்ளது.
அவர் வெளியிட்டு உள்ள ஒரு வீடியோவில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து வரும் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்களின் தரவுத்தளத்தை உருவாக்கி ஒரு கணினியில் சேமிக்குமாறு இஸ்லாமிய நாடுகளை நாயக் கேட்டுக்கொள்வதைக் கேட்கலாம்.
"அடுத்த முறை அவர்கள் ஒரு வளைகுடா நாட்டிற்கு வந்தால், அது குவைத், சவுதி அரேபியா, துபாய் அல்லது இந்தோனேசியா எனில், அவர்கள் இஸ்லாத்தை துஷ்பிரயோகம் செய்தார்களா அல்லது நபியை அவமதித்திருக்கிறார்களா என்று சரிபார்த்து, பின்னர் அவர்களை அழைத்து வந்து அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்து அவர்களை சிறையில் அடைக்கவும் என அதில் கூறி உள்ளார்.