கர்நாடகத்தில் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க முடிவு - மாநில அரசு அறிவிப்பு


கர்நாடகத்தில் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க முடிவு - மாநில அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 6:33 PM IST (Updated: 23 Oct 2020 6:33 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் முடிவெடுக்கலாம் என்றும், கல்லூரிக்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும் என்று துணை முதல்வரும் உயர்கல்வி துறை அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

இது குறித்து கர்நாடக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 17 முதல் பொறியியல், பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கல்லூரிகளுக்கான வகுப்புகளை மீண்டும் திறந்து நடத்த முடிவு செய்துள்ளோம். இருப்பினும், மாணவர்கள். தங்கள் விருப்பப்படி, ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் வகுப்புகளை தேர்தெடுத்துக் கொள்ளலாம்.

அதாவது கல்லூரிக்கு வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story