ஆட்சிக்கு வந்த பின் குடும்பம் பற்றி மட்டுமே சில கட்சிகள் நினைக்கின்றன; பீகார் முதல் மந்திரி பேச்சு


ஆட்சிக்கு வந்த பின் குடும்பம் பற்றி மட்டுமே சில கட்சிகள் நினைக்கின்றன; பீகார் முதல் மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2020 1:44 AM IST (Updated: 24 Oct 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் குடும்பம் பற்றி மட்டுமே சில கட்சிகள் நினைக்கின்றன என பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி நிதீஷ் குமார் பேசினார்.

பாகல்பூர்,

பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான முதற்கட்ட தேர்தல் வருகிற 28ந்தேதி நடைபெறுகிறது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பீகாரில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட முதல் மந்திரி நிதீஷ் குமார் மேடையில் பேசும்பொழுது, பீகாரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், வளர்ச்சி பணிகள் தொடரவும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

சிலர் சமூகத்தில் மோதல் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தி ஓட்டுகளை பெறும் சிலர் உள்ளனர்.  அவர்கள் வெற்றி பெற்ற பின்னர், தங்களது குடும்பங்களை பற்றி மட்டுமே யோசிக்கின்றனர் என்று கூறினார்.
ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் அதன் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரை தாக்கும் வகையில் பீகார் முதல் மந்திரி பேசிய இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

Next Story