கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!


கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
x
தினத்தந்தி 24 Oct 2020 7:03 AM IST (Updated: 24 Oct 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்த எட்டு மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ .1 லட்சம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று நோய் பாதிப்பால்  மார்ச் 25 முதல் 68 நாள் கடின ஊரடங்கு விதிக்கப்பட்டது. இது அனைத்து துறைகளிலும் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை தற்காலிகமாக வணிகத்தை  மூடுவதற்கு கட்டாயப்படுத்தியது, ஆனால் அவை அவசியமானவை என்று கருதப்பட்டன. இவை படிப்படியாக தளர்த்தப்பட்டன.

ஊரடங்கு தளர்வினால் அதிகமான வணிகங்கள் நடைபெற்றதாலும், பொருளாதார நடவடிக்கைகள் அதிக வேகத்தை எடுதத்தாலும், மேலும்  பண்டிகைகாலம் என்பதால் இந்த மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வலுவாக இருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்வதன் மூலம், அக்டோபரில் மறைமுக வரி வசூல் “ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கக்கூடும் என்று ஒரு அதிகாரி கூறினார்.


Next Story