இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Oct 2020 10:00 AM IST (Updated: 24 Oct 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 53,340- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் 650- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 14 ஆயிரத்து 682- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 956-ஆக உள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்புடன் 6 லட்சத்து 80 ஆயிரத்து 680- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 ஆயிரத்து 549-பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனாவில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் இந்தியாவில் குணம் அடைந்துள்ளனர். 


Next Story