டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் கலாச்சார நிகழ்ச்சி - அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்


டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் கலாச்சார நிகழ்ச்சி - அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 24 Oct 2020 10:01 PM IST (Updated: 24 Oct 2020 10:01 PM IST)
t-max-icont-min-icon

டார்ஜிலிங் ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

புதுடெல்லி,

டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் டார்ஜிலிங் மற்றும் சிக்கிமில் உள்ள ராணுவ தளங்களுக்குச் சென்று பாதுகாப்புப் படை வீரர்களை சந்தித்து அவர்களுடன் இணைந்து தசரா விழாவை கொண்டாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சுக்னா பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு ராஜ்நாத் சிங் வருகை தந்தார். அங்குள்ள ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடிய பின்னர் ராணுவ தளவாடங்களை பார்வையிட்டார். இதனையடுத்து ராணுவ வீரர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

Next Story