எங்களது ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும்; சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்
எங்களது ஆட்சி 25 ஆண்டுகளுக்கு தொடரும் என்று தசரா பேரணியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
புனே,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையை தொடர்ந்து மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதனால் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் நாடு முழுவதும் மக்கள் பண்டிகை கொண்டாட்டங்களில் கவனமுடன் ஈடுபடும்படி மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
இந்நிலையில், மராட்டியத்தின் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கலந்து கொண்டார்.
அவர் பேசும்பொழுது, இங்கிருந்தே மகா என்பது அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளது. மகா அகாடி, மகாராஷ்டிரா இன்னும் பல. இந்த மகா டெல்லிக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த ஆண்டு நான் கூறும்பொழுது, இந்த ஆண்டில் சிவசேனாவின் முதல் மந்திரி ஆட்சி செய்திடுவார் என கூறினேன். அது நடந்து கொண்டிருக்கிறது என்பதனை காணலாம்.
இந்த அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும். உண்மையில், நாங்கள் 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி செய்வோம் என்று கூறினார்.
Related Tags :
Next Story