தீபாவளி பண்டிகையையொட்டி யஷ்வந்தபுரம்-தனப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்


தீபாவளி பண்டிகையையொட்டி யஷ்வந்தபுரம்-தனப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2020 6:54 AM IST (Updated: 26 Oct 2020 6:54 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி யஷ்வந்தபுரம்-தனப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தீபாவளி, துர்கா, சாத் பூஜைகளையொட்டி பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து பீகார் மாநிலம் தனப்பூருக்கு இருமார்க்கமாக வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி வரை வாரந்தோறும் திங்கள், சனிக்கிழமைகளில் தனப்பூரில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்:-03209) புதன், வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக வருகிற 29-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் யஷ்வந்தபுரத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்:-03210) வியாழன், சனிக்கிழமைகளில் காலை 8 மணிக்கு தனப்பூரை சென்றடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி, எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல், விஜயவாடா, வாரங்கல், பல்லாராஷா, நாக்பூர், இடர்சி, சபல்பூர், சட்னா, பிரக்யாராஜ் சோக்கோய், தீனதயாள் உபாத்யா, ஆரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story