மெகபூபா முப்தி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி செய்தியாளர்கள் சந்திப்பில்,
என் கொடி இதுதான் (மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் கொடியைக் காட்டி). இந்தக் கொடி மீண்டும் கொண்டு வரப்பட்டால், மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.
எங்கள் கொடியை மீண்டும் கொண்டு வராமல் வேறு எந்த கொடியையும் உயர்த்தப் போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான உறவை வளர்த்தெடுத்தது.
இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்கள் உறவு ஜம்மு காஷ்மீர் கொடியைத் தவிர்த்துக் கிடையாது. எங்கள் சொந்தக் கொடியைத் திரும்பப் பெறும் வரை, நாங்கள் வேறு எந்தக் கொடியையும் உயர்த்த மாட்டோம் என்றார்.
நாட்டின் தேசியக் கொடி குறித்து மெகபூபா முப்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீருக்கு உரிய சிறப்பு அந்தஸ்து மீண்டும் வரும் வரை மூவர்ண கொடியை ஏந்த போவதில்லை என மெகபூபா முப்தி அறிவித்திருந்த நிலையில், முன்னதாக ஸ்ரீநகர் லால் சவுக்கில் உள்ள மணிக்கூண்டு அருகே தேசிய கொடியை ஏற்ற முயன்ற பாஜகவினரை பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story