தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 4 நேபாளிகள் கைது + "||" + 4 Nepalis arrested in Telangana robbery case

தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 4 நேபாளிகள் கைது

தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 4 நேபாளிகள் கைது
தெலுங்கானாவில் வீட்டு வேலைக்காக பணியில் சேர்ந்த நேபாளிகள் 4 பேரை கொள்ளை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
ரங்காரெட்டி,

தெலுங்கானாவில் நச்சாரம் பகுதியில் எச்.எம்.டி. நகரில் சித்தபுளுசு பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது வீட்டில் இருந்து ரூ.10 லட்சம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயுள்ளன.  இதுபற்றி போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார்.

இதன்பேரில் 15 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.  அவர்கள் மஞ்சு (வயது 35), ஹேம்பிரசாத் (வயது 44), சாத் (வயது 42) மற்றும் விஸ்னா சுனார் (வயது 40) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  அனைவரும் நேபாள நாட்டினர்.

இவர்களில் மஞ்சு மற்றும் கசேரா என்பவர் தம்பதி என அறிமுகப்படுத்தி கொண்டு பிரதீப்பின் வீட்டில் பணியாளாக சேர்ந்துள்ளனர்.  சம்பவத்தன்று பிரதீப்பின் தாயாருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து உள்ளனர்.  இதில் அவர் மயக்கமடைந்து உள்ளார்.  இதனை பயன்படுத்தி வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.1.49 லட்சம் மதிப்பிலான தங்கம், 2 கைக்கெடிகாரங்கள், தூக்க மாத்திரைகள் கொண்ட அட்டை, மொபைல் போன் ஒன்று ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குமரியில் கடந்த 7 நாட்களில் கஞ்சா, மது விற்ற 127 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் கஞ்சா, மது விற்ற 127 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஐ.பி.எல். சூதாட்டம்: 4 பேர் கைது; ரூ.4 கோடி பணம் பறிமுதல்
ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணமும் பறிமுதல் செய்துள்ளனர்.
3. பெண்கள் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது; கள்ளக்காதலனை அடைய தீர்த்துக்கட்டியது அம்பலம்
கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலனை அடைய கைதான பெண் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
4. போதைப்பொருள் விவகாரத்தில் கைது: வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை; மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி
பெங்களூருவில் போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள வீரேன் கண்ணாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
5. என்.ஐ.ஏ. கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பு
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்த அல்கொய்தா பயங்கரவாதிகளில் 4 பேருக்கு பாகிஸ்தான் தலைமையுடன் நேரடி தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.