வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்த பேஸ்புக் இந்தியா அங்கி தாஸ் பதவி விலகல்


வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்த பேஸ்புக் இந்தியா அங்கி தாஸ் பதவி விலகல்
x
தினத்தந்தி 27 Oct 2020 7:28 PM IST (Updated: 27 Oct 2020 7:28 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவினருக்கு எதிராக "வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை எதிர்த்த பேஸ்புக் இந்தியா பொதுக் கொள்கையின் இயக்குனர் அங்கி தாஸ் பதவி விலகி உள்ளார்.


புதுடெல்லி

அங்கி தாஸ் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் பொதுக் கொள்கையின் இயக்குனராக இருந்தார். இவர்  பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

பா.ஜனதாவினருக்கு எதிராக "வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை, இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் பொதுக் கொள்கையின் சக்திவாய்ந்த இயக்குநரான பேஸ்புக்கின் அங்கி தாஸ் எதிர்த்தார் என்றும் வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே பேஸ்புக் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குனர், அங்கி தாஸ், வால் ஸ்ட்ரீட் கட்டுரைக்கு பின்னர் தனக்கு ஆன்லைனில் பலர் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளதுடன் பலருக்கு எதிராக டெல்லி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த பதவியிலிருந்து அங்கிதாஸ் விலகி உள்ளார்.  பேஸ்புக்கில் தனது பங்கிலிருந்து விலகுவதற்கு அங்கி முடிவு செய்துள்ளார். அங்கி இந்தியாவில் எங்கள் ஆரம்பகால ஊழியர்களில் ஒருவராக இருந்தார், கடந்த 9 ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் அதன் சேவைகளிலும் ஒரு கருவியாக பங்கு வகித்தார், ”என்று பேஸ்புக்கின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் ஒரு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த அங்கி தாஸ் (49 வயது), 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து பேஸ்புக்கில் இணைந்தார். இந்தியாவில் பேஸ்புக்கின் கொள்கை ரீதியான முக்கிய பொறுப்பில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்தார். 

இணைய இணைப்பினை இதுவரை பெறாத அனைவரும், அதனைப் பெறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இண்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்னும் திட்டத்தினை இந்தியாவில் 2015ம் ஆண்டு செயல்படுத்தியது. இந்த திட்டம் அப்போது இந்தியாவில் தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் அப்போது கொள்கை ரீதியாக முடிவெடுக்கும் இடத்தில் அங்கி தாஸ் தான் இருந்தார் என்று கூறப்படுகிறது.

Next Story