டெல்லி சிறைகளில் இடமில்லை; கைதிகளின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடிவு


டெல்லி சிறைகளில் இடமில்லை; கைதிகளின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடிவு
x
தினத்தந்தி 27 Oct 2020 11:59 PM IST (Updated: 27 Oct 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி சிறைகளில் போதிய இடமில்லாத நிலையில் விசாரணை கைதிகளின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.  வீட்டை விட்டு அச்சமின்றி வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில், டெல்லியில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இது ஒருபுறம், தலைநகரில் குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலைமையை எடுத்து காட்டினாலும், சிறைகளில் போதிய இடமில்லாத சூழலும் காணப்படுகிறது.

இதனை எதிர்கொள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரது தலைமையில் குழு ஒன்று ஆலோசனை மேற்கொள்ள அமைக்கப்பட்டது.  டெல்லி சிறைகளில் உள்ள விசாரணை கைதிகளில் 3,337 பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு 30 நாள் நீட்டிப்பு வழங்குவது என நீதிபதி குழு முடிவு செய்துள்ளது.  இதனால், கொரோனா பாதிப்பு காலத்தில் போதிய இடமின்றி சிறைகள் நிரம்பி வழியும் சூழலில் கைதிகள் மற்றும் காவலர்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும்.

Next Story