மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன், குட்டி விமானங்கள் பறக்க விட தடை


மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன், குட்டி விமானங்கள் பறக்க விட தடை
x
தினத்தந்தி 28 Oct 2020 8:22 AM GMT (Updated: 2020-10-28T13:52:16+05:30)

மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன், குட்டி விமானங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

தீபாவளி போன்ற பண்டிகைகள் நடைபெற உள்ள நிலையிலும், மும்பை தாக்குதல் நினைவு தினம் வர உள்ள நிலையிலும் மும்பையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

அதன்படி போலீசார் நகாில் டிரோன், ரிமோட் மூலம் இயக்கப்படும் குட்டி விமானங்களை பறக்கவிட தடைவிதித்து உள்ளனர். டிரோன், குட்டி விமானங்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால் போலீசார் இந்த தடையை விதித்து உள்ளனர்.

இந்த தடை வருகிற 30-ந் தேதி முதல் நவம்பர் 28-ந் தேதி வரை 30 நாட்கள் அமலில் இருக்கும். இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “144 தடை உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் இது வழக்கமாக பிறப்பிக்கப்படும் உத்தரவு தான். ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது” என்றார்.

Next Story