ஆந்திராவில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி


ஆந்திராவில் நீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 29 Oct 2020 1:40 AM IST (Updated: 29 Oct 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் நீரோடையில் இறங்கி குளித்த 6 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.

கோதாவரி, 

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பூதேவிபேட்டா என்கிற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அருகிலுள்ள வசந்தவாடா கிராமத்துக்கு சுற்றுலா சென்றனர். அவர்களில் சிறுவர்கள் 6 பேர் அங்குள்ள ஒரு நீரோடையில் இறங்கி குளித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சிறுவர்கள் 6 பேரும் நீரோடையில் மூழ்கினர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீரோடைக்குள் இறங்கி சிறுவர்களை தேடினர். இதற்கிடையில் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் சிறுவர்களை தேடும் பணியில் இறங்கினர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சிறுவர்கள் 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மற்ற 2 சிறுவர்களின் உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story