டெல்லி மார்க்கெட் பகுதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அச்சம்


டெல்லி மார்க்கெட் பகுதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவல் அச்சம்
x
தினத்தந்தி 31 Oct 2020 11:58 PM IST (Updated: 31 Oct 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் டெல்லி மார்க்கெட் பகுதிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகரித்தே காணப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று மேலும் 5,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,665-பேர் குணம் அடைந்துள்ள நிலையில், இன்று மட்டும் 41 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதாலும், இதர தேவைகளுக்காகவும் ஷாப்பிங் செய்ய பெருமளவில் மக்கள் மார்க்கெட் பகுதிகளுக்கு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடைகள் திறக்காமல் இருந்ததால் புதிய துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை பொது மக்கள் வாங்க முடியவில்லை.

தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மார்க்கெட் பகுதிகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து விடக்கூடாது என்ற அச்சமும் எழுந்துள்ளது. எனவே மக்கள் பொது இடங்களில் கவனமாக செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Next Story