தேர்தல் பிரசார மேடை சரிந்து விழுந்து விபத்து: பப்பு யாதவுக்கு பலத்த காயம்
பப்பு யாதவ் என்கிற ராஜேஷ் ரஞ்சன். பின்னர் ஜன அதிகார் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
முசாபர்பூர்,
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் முன்னணி தலைவராக வலம் வந்தவர் பப்பு யாதவ் என்கிற ராஜேஷ் ரஞ்சன். பின்னர் ஜன அதிகார் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
நடைபெற்று வரும் பீகார் தேர்தலில் இவரது கட்சியும் களத்தில் உள்ளது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மீனாபூர் தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இதில் ஓரிடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பப்பு யாதவ் உரையாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென அந்த மேடை சரிந்து விழுந்தது. இதில் கீழே விழுந்த பப்பு யாதவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
எனவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பப்பு யாதவை டாக்டர்கள் பரிசோதித்ததில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேடை சரிந்ததில் காயமடைந்த தவலை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ள பப்பு யாதவ், கூட்டத்துக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யாததற்காக மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story