உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் மீது பெண்கள் தாக்குதல்
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை இரு பெண்கள் காலணிகளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜலாவுன்,
உத்தரபிரதேசத்தில் பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறி காங்கிரஸ் மாவட்ட தலைவரை இரு பெண்கள் காலணிகளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் ஓராய் மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளவர், அனுஜ் மிஸ்ரா. அவர் தங்களை பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறி, சகோதரிகளான இரு பெண்கள், காலணிகளால் தாக்கினர்.
அதை சிலர் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக அனுஜ் மிஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருவதாக எஸ்.பி. யஷ்வீர் சிங் தெரிவித்தார்.
மாவட்ட தலைவர் தங்களை தொலைபேசியில் அழைத்து மோசமாக பேசிவந்ததாகவும் இரண்டு பெண்களும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி விளக்கம் வெளியிட்டது. அதில், குறிப்பிட்ட சகோதரிகளில் ஒருவர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்ததாகவும், அவர் சமீபத்தில் அதிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்து மாவட்ட தலைவரை தாக்கியிருக்கிறார். மாறாக, பாலியல் சீண்டல் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story