கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை - மத்திய வெளியுறவுத்துறை
கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிகமாக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று இம்ரான்கான் அறிவித்தார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட் பகுதிக்கு சென்றார். கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிகமாக மாகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-
கில்கிட்-பல்டிஸ்தான் உள்பட காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். கடந்த 1947-ம் ஆண்டு, இந்தியாவுடன் காஷ்மீருடன் சட்டரீதியாக இணைந்தபோதே உறுதி செய்யப்பட்டது.
எனவே, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பல்டிஸ்தான் மீது பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை. தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களையும் மறைக்க பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை நிராகரிக்கிறோம்.
அப்பகுதிகளில் மாற்றம் செய்வதற்கு பதிலாக, அங்கிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story