கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட மங்களூரு பீச்
கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பீச் பல மாதங்களுக்கு பின் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டது.
மங்களூரு,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செயல்பாட்டில் உள்ளது. மராட்டியம், தமிழகம் ஆகியவை அடுத்தடுத்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை கொண்டவையாக உள்ளன. சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் சரிவடைந்து வருகிறது. குணமடைந்தோர் விகிதமும் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தொற்று குறைந்த மாநிலங்களில் விருப்பத்தின்பேரில் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆந்திராவில் 9 மற்றும் 10 வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டு உள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமடைய தொடங்கியவுடன் பீச்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பனம்பூர் பீச் பல மாதங்களுக்கு பின் சுற்றுலா பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, நீண்ட நாட்களாக கடல் காற்றை வாங்காமல் தவித்து போயிருந்த மக்கள் திரண்டு வந்து பீச்சில் குவிந்து விட்டனர்.
இதுபற்றி பீச்சுக்கு வந்த சுற்றுலாவாசி ஒருவர் கூறும்பொழுது, வருங்காலத்திலும் கொரோனா தொற்றை நிறுத்த முடியாது. ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தேவை உள்ளது. அதனால் நாங்கள் இன்று பீச்சுக்கு வந்துள்ளோம். வீட்டிலேயே முடங்கி கிடப்பது என்பது நல்லதல்ல. அதனால் மனஅழுத்தம் போன்றவையே ஏற்படும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story