போதைப்பொருள் வழக்கு: நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் தலைமறைவு


போதைப்பொருள் வழக்கு: நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் தலைமறைவு
x
தினத்தந்தி 3 Nov 2020 2:55 AM IST (Updated: 3 Nov 2020 2:55 AM IST)
t-max-icont-min-icon

தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபல நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில், தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபல நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென தீபிகா படுகோனேயின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் நடத்திய சோதனையில், 1.8 கிராம் கஞ்சாவும், கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.

இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பினர். ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. தலைமறைவாகிவிட்டார்.

Next Story