நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல் தொடங்கியது


நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல் தொடங்கியது
x
தினத்தந்தி 3 Nov 2020 2:19 AM GMT (Updated: 3 Nov 2020 2:19 AM GMT)

பீகார் சட்டசபை தேர்தலை தொடர்ந்து நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இதற்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.  தேர்தல் நடக்கும் பகுதிகளில் முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீகார் சட்டசபை தேர்தல் தவிர்த்து, நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தலும் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

இதன்படி, மத்திய பிரதேசம்-28, குஜராத்-8, உத்தர பிரதேசம்-7, ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகள், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதி என மொத்தம் 54 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு ஆனது இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Next Story