நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக முடியாது: சிராக் பாஸ்வான்
பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாட்னா,
பீகார் மாநிலத்தின் பேரவைத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. 3 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் 2-ஆம் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களித்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ககரியா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
" நிதிஷ் குமார் பீகார் முதல்வராக மீண்டும் ஆக முடியாது. மக்கள் அவரை நிராகரித்திருக்கிறார்கள். முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிதிஷ்குமார் முகத்தில் அச்சத்தை காண முடிகிறது. நிதிஷ் குமாருக்கு வாக்களித்து பீகார் மக்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்” என்றார்.
Related Tags :
Next Story