தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது


தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது
x
தினத்தந்தி 4 Nov 2020 9:31 AM IST (Updated: 4 Nov 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 2018ஆம் ஆண்டு தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மும்பை காவல்துறை தனது மாமனார் மற்றும் மாமியார், மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாக தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.  

ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின் படி, மும்பை போலீசார் அர்னாப் கோஸ்வாமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

அர்னாப் கோஸ்வாமி கைது சம்பவத்திற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மராட்டியத்தில் பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம் என கூறியுள்ளார்.

Next Story