மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப் முதல்வர் போராட்டம்


மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப் முதல்வர் போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2020 5:55 PM IST (Updated: 4 Nov 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுடெல்லி,

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டன. இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.வேளாண் சட்டங்கள் குறித்து  ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவதற்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் அனுமதி கோரியிருந்தாா். ஆனால், அதற்கு ஜனாதிபதி அலுவலகம் சாா்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று  பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் அமரீந்தர் சிங் கடுமையாக சாடினார். 

Next Story