ஆந்திராவில் 150 ஆசிரியர்களுக்கும்,10 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்து 3 நாட்களில் 150 ஆசிரியர்களுக்கும்,10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சித்தூர்,
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆந்திராவில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10ம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்கள் ஆன நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
சித்தூரில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story