பிப்ரவரி 24 வரை உள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க அனுமதி


பிப்ரவரி 24 வரை உள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க அனுமதி
x
தினத்தந்தி 4 Nov 2020 10:30 PM IST (Updated: 4 Nov 2020 10:30 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரை உள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அனுமதித்துள்ள சிறப்பு விமான சேவை மூலம் மட்டுமே சர்வதேச போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் உள்நாட்டு விமான சேவை குறித்து விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த ஜூன் 26 ஆம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, விமான நிறுவனங்கள்  தங்களது உள்நாட்டு விமானங்களில் அதிகபட்சமாக 45 சதவீதத்தை மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி 60 சதவீத விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் எத்தனை நாட்கள் வரை 60 சதவீத விமான போக்குவரத்தை தொடர வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 வரை உள்நாட்டு பயணிகள் விமான சேவையில் 60 சதவீத விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story