பீகார் இறுதி கட்ட தேர்தல்: பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது


பீகார் இறுதி கட்ட தேர்தல்: பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது
x
தினத்தந்தி 5 Nov 2020 6:18 AM IST (Updated: 5 Nov 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

பீகார் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

பாட்னா,

பீகார் சட்டசபையின் 243 தொகுதிகளுக்கான தேர்தலில், 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதியும், 94 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் நடைபெற்றன.

இந்நிலையில், 78 தொகுதிகளுக்கான 3-வது இறுதிகட்ட தேர்தல் நாளைமறுதினம் (நவ.7) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

3-வது கட்ட தேர்தலில் 110 பெண்கள் உள்பட மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.35 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க காத்திருக்கின்றனர்.

Next Story