பீகாரில் படகு கவிழ்ந்து விபத்து: 100 பேரில் பலர் காணவில்லை என தகவல்
பீகாரில் கண்டக் நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் நாவ்காச்சியா பகுதியில் கண்டக் நதியில் 100 பேர் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்த 100 பேரில் பலரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையின் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 40 பயணிகள் செல்ல வேண்டிய படகில், இரண்டு மடங்கு பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story