அரியானாவில் 20 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: கள்ளச்சாராயம் காரணமா? போலீசார் விசாரணை
அரியானாவில் சோனிபட் நகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து 20 பேர் உயிரிழந்துள்ளதற்கு கள்ளச்சாராயம் காரணமாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சட்டீஸ்கர்,
தலைநகர் டெல்லி அருகே உள்ள இடம் சோனிபட். இந்நகரம் அரியானா மாநிலத்தின் சத்தீஸ்கர் நகரிலிருந்து 214 கிலோ மீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ளது.
இந்நகரில் கடந்த மூன்று நாட்களில் நான்கு வெவ்வேறு இடங்களில் 20 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இதற்குப் கள்ளச்சாராயம் அருந்தியதே காரணம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து சோனிபட் துணை காவல் கண்காணிப்பாளர் வீரேந்தர் சிங் கூறியதாவது:
சோனிபட் நகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் அடுத்தடுத்து 20 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரே தகனம் செய்துள்ளனர்.
நான்கு பேரின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். நான்கு உடல்களின் உடற்கூறு சோதனை அறிக்கைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். போலி மதுபானம் உட்கொண்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.
Related Tags :
Next Story