ஜனநாயக திருவிழாவான தேர்தலில் பங்கு கொள்ள இந்திய மக்கள் விரும்புகின்றனர்; தலைமை தேர்தல் ஆணையாளர் பேட்டி
இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் பங்கு கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர் என இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, முதல் கட்ட தேர்தல் கடந்த 28-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 3-ந் தேதியும் நடந்து முடிந்தது. 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.
இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அளித்துள்ள பேட்டியில், பீகார் தேர்தலில் பூத் ஒன்றுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை 1,500ல் இருந்து ஆயிரம் என குறைக்க வேண்டும்.
அதற்கு பதிலாக பூத்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என கூறினார். இந்தியாவில் நடைபெறும் தேர்தலானது, ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்பட்டு, அதில் பங்கு கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story