’வாட்ஸ் அப் பே’ சேவைக்கு இந்தியாவில் அனுமதி- கூகுள் பே, பேடிஎம்-க்கு கடும் போட்டி


’வாட்ஸ் அப் பே’ சேவைக்கு இந்தியாவில் அனுமதி-  கூகுள் பே, பேடிஎம்-க்கு கடும் போட்டி
x
தினத்தந்தி 6 Nov 2020 12:34 PM IST (Updated: 6 Nov 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி வழங்கு நிறுவனம் வாட்ஸ் அப். இந்தச் செயலியை இந்தியா முழுவதும் சுமார் 40 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.  வாட்ஸ் அப் மூலம், பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதிகள் குறித்த ஆய்வுகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வந்தன. இதில் 10 லட்சம் பயனாளிகளின் வாட்ஸ் அப் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனை சேவைகளை வாட்ஸ் அப் வழங்க மத்திய அரசின் என்.பி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது.  ஏற்கனவே கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் பணப்பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி வாட்ஸ் அப் பே மூலம் சுலபமாக பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். வாட்ஸ் அப் செயலியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால், மற்ற செயலிகளுக்கு இதனால் நெருக்கடி ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப் பே சேவைக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்திருப்பது குறித்து   பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறும் போது,  இந்தியா முழுவதும் வாட்ஸ் அப் பே சேவைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இதை சாத்தியமாக்கிய அனைத்து  தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாட்ஸ் அப் மூலமாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எந்த கட்டணமும் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும். இந்த பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது” என்று தெரிவித்துள்ளார்.


Next Story