கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் - கேரள மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு


கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் - கேரள மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Nov 2020 5:14 PM IST (Updated: 6 Nov 2020 5:14 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் பெரும்பாலான பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான தேதியையும் அறிவித்துள்ளது.

அதன்பின் டிசம்பர் 8-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர் 10-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும், டிசம்பர் 14-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 16ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story