கேரள உயர்கல்வித்துறை மந்திரி கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்
கேரள உயர்கல்வித்துறை மந்திரி கே.டி.ஜெலீலுக்கு சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி தூதரகத்திற்கு வந்த பார்சலை சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுவரை 20 பேர் வரை கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கேரள உயர்கல்வித்துறை மந்திரி கே.டி.ஜெலீலுக்கு சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மந்திரி ஜெலீலுடன் சுவப்னா சுரேஷ், நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே உயர்கல்வித்துறை மந்திரி ஜெலீலிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story